யாழில் – நரம்பியல் சிகிச்சைக்கான நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – நெருக்கடிக்கு இதுவே காரணம் என பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, April 13th, 2023

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முன்னேற்றகரமானதாகவே அமைந்திருந்ததாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக முறையற்ற விதத்தில் நரம்புச் சிகிச்சைப் பிரிவானது செயற்பாடற்றுக் காணப்படுவதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சமூகத்தின் செய்திப்பிரிவு இந்த விடயம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

குறிப்பாக நரம்பியல் சத்திரசிகிச்சை மற்றும் நரம்பியல் சிகிச்சை தொடர்பான பிரிவிற்கு போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட போதும் நோயார்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக வைத்தியர் ஜமுனானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதனை நிர்வத்தி செய்வதற்கு புதிய விடுதிகள் அமைக்கப்பட்டு அதற்கான உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் அவற்றை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடி நிலை உள்ளதாக வைத்தியர் ஜமுனானந்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: