இலங்கைக்கு தென்கொரியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் – இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் அறிவிப்பு!

Friday, June 17th, 2022

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுக்காண இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தமது நாடு தயாராக உள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜீயோன்ங் வூன்ஜின் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கிடையில் 45 ஆண்டு கால இராஜதந்திர தொடர்புகளை இதன்போது நினைவு கூர்ந்த ஜனாதிபதி, தென் கொரிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அத்தோடு, அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள யூன் சுக் யேலோ மற்றும் அவரது கட்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக ஜனாதிபதி தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தென் கொரியாவின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு தென் கொரியாவில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்குமாறும், தொழிற்துறை முதலீடுகளை ஊக்குவிக்குமதறும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: