யாழில் சூடுபிடித்துள்ள மண் சட்டிகளின் வியாபாரம்!
Saturday, July 22nd, 2017
யாழ் .குடாநாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (23) இறந்த தந்தையரை நினைத்து அனுஷ்டிக்கப்படவுள்ள முக்கிய விரதமான ஆடி அமாவாசையை முன்னிட்டு யாழின் பல்வேறு பகுதிகளிலும் மண் சட்டிகளின் வியாபாரம் இன்றைய தினம் சூடு பிடித்துள்ளது.
யாழ். குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நேற்று முதல் மண் சட்டிகளின் வியாபாரம் இடம்பெற்று வருகிற போதும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மண் சட்டிகளின் வியாபாரம் சூடு பிடித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
குறித்த சட்டிகள் தரத்தித்திற்கேற்ப 30 ரூபா, 50 ரூபா, 100 ரூபா, 150 ரூபா எனப் பல்வேறு விலைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
Related posts:
700ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு வைத்திய நியமனங்கள்- அமைச்சர் ராஜித!
90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளது - நிதி இராஜாங்க அமைச்சர் ...
இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸும் இலங்கையும் பொதுவான பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் - இலங்கைக்கான பிர...
|
|
|


