யாழில் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா விமரிசை!

இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா இன்று வியாழக்கிழமை(26)காலையாழ். இந்தியன் இல்லத்தில் விமரிசையாக இடம்பெற்றது. விழாவில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாணவ மாணவிகள்இ வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி மாணவிகள் ஆகியோரின் கோலாட்டம்இ பார்வையற்ற முல்லைத்தீவு தேவிபுரம் இனிய வாழ்வு இல்ல மாணவ மாணவிகளின் குழுப்பாடலுடன் கூடிய குழுநடனம்இ வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்களின் காவடியாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. தொடர்ந்து மக்கள் புலவன் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் ராஜ்குமார் பாரதியின் விசேட உரையும் இடம்பெற்றது. விழாவில் பெருமளவானோர் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


Related posts:
மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!
நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவின...
கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் - பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல...
|
|