யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம்!
Friday, February 16th, 2018
கடந்த ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டிருப்பதாக நிலைபெறா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சுதெரிவித்துள்ளது.
இங்கு விஜயம் செய்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 397,122 எனவும் இவர்களுள் 207,927 பேர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உடவளவ தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் 358.44 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன் 236867 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம்செய்துள்ளனர்.
ஹோட்டன் தென்ன தேசிய பூங்காவின் மூலம் 361.09 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன் 345,480 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா இன்று: அலையென திரண்ட பக்தர்கள்!
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 ரூபா பொதி மே 2 முதல் வழங்க ஏற்பாடு - வர்த்தக அமைச்சர் பந்த...
விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை - இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் வைத்தியசாலைகளிலு...
|
|
|


