20 தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்!

Monday, October 19th, 2020

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகின்றது.

இன்று மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

இதேவேளை 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று 18 ஆம் திகதி இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

நேற்று மாலை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வீட்டுல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

இந்நிலையிலேயே இன்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையேஇவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் கூட்டங்களை நடத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: