யாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

Wednesday, October 12th, 2022

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு உ ஆலோசனை வழங்கியுள்ளார்.

மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தனது செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதனால், கிராம மட்டத்திலிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் மாவட்ட, தொகுதி மட்டக் கூட்டங்களிலும் தானும் பங்கேற்கவுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்து எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத் தொடருடன் பிராந்திய மற்றும் கிராம மட்டத்தில் சிறிய கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு மகிந்த தனது செயற்பாட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் இறுதியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனவும், பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

யாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன். எந்த தேர்தல் நடந்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

சற்று அமைதியாக காத்திருந்த தமது கட்சியினரை எழுப்பி தேர்தலுக்கு அனுப்பும் நடவடிக்கையையே செய்ய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்சர்களை மக்கள் தமது போராட்டம் மூலம் வெளியேற்றியிருந்தனர். இந்நிலையில் தமது வெற்றி என்ற கோசத்துடன் மகிந்த விடுத்துள்ள அறிப்பானது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: