மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவு: 2 வாரங்களில் நஷ்டஈடு!
Monday, September 25th, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நஷ்டஈட்டை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய காப்புறுதி நிதியம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 18,000 பேருக்காக 900 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது வரை 9,000ம் குடும்பங்களுக்கான காசோலை எழுதப்பட்டுள்ளதாகவும், தேசிய காப்புறுதி நிதியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்னும், இவர்களுக்கு வழங்கத் தேவையான நிதி ஆறு மாதங்களுக்கு முன்னரே கொலன்னாவை பிரசேத செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த விடயங்கள் நேரடியாக கண்காணிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
வளிமண்டலத்தில் தளம்பல் நிலை - நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் த...
ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு கூட்டமைப்பிற்கு நிச்சயம் வாய்ப்பு கிட்டும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெர...
இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் !
|
|
|


