யானைகள் புகையிரதத்தில் மோதுவதைத் தவிர்க்க விசேட திட்டம்!

Thursday, August 18th, 2016

காட்டு யானைகள் பிரவேசிக்கும் பகுதிகளுக்கு அண்மையில் பயணிக்கும் புகையிரதங்களில் இன்று முதல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

புகையிரத மார்க்கங்களை கண்காணித்து புகையிரத சாரதிகளுக்கு வழிகாட்டுவதற்கே அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதற்கமைய தலைமன்னார் முதல் மதவாச்சிக்கு இடைப்பட்ட புகையிரத மார்க்கத்திலும், மதவாச்சி தொடக்கம் கிளிநொச்சி வரையான புகையிரத மார்க்கத்திலும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தபடவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.எஸ்.கே பத்திரத்ன குறிப்பிட்டுள்ளார்.

செட்டிக்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் புகையிரதத்தில் மோதுண்டு 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: