மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் டெங்கு குடம்பிகள்.

Tuesday, July 4th, 2017

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடியவாறு காணப்பட்ட இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை புகை அடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டெங்கு நோய் பரவியதன் காரணமாக அண்மையில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடப்பட்டது.மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவியொருவரும் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார்.மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும் அந்த பல்கலைக்கழத்தின் 80 மாணவர்கள் அளவில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனுடன் பதுளை பொது மருத்துவமனையில் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், அதனால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: