மே முதலாம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை 61 ஆயிரத்த 754 பேர் கொரோனாவால் பாதிப்பு –இராணுவ தளபதி தகவல்!

Thursday, May 27th, 2021

இலங்கையில் மே முதலாம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை மொத்தம் 61 ஆயிரத்த 754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனகொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தரவுகளுக்கு அமைய கொழும்பு, கம்பஹா மற்றும் கழுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய சிவப்பு மண்டலமாக காணப்படுகின்றன.

இதேவேளை நேற்றையதினம் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 728 பேரில் கொழும்பில் 522 பேரும், கம்பஹாவில் 558 பேரும், களுத்துறையில் 476 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடல் உணவுகள் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்க திட்டம் - ஜனாதிபதி கோட்டாபய ரா...
ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை - நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையி...
அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட்டது - ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமான...