மே மாதமளவில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!
Thursday, April 13th, 2017
இலங்கைக்கு எதிர்வரும் மே மாதமளவில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரிச் சலுகை வழங்குவது குறித்து ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த இந்தப் பிரதிநிதிகள் எதிர்வரும் 19ம் திகதி பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய விசேட கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
பொருளாதார ஸ்தீரத்தன்மை, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் போன்றன குறித்து ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கைக்கு வந்துள்ள பிரதிநிதிகள் ஆராய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் ஜனாதிபதி!
மீண்டும் பலத்த மழை: இரணைமடு வான்கதவுகள் திறப்பு!
நெல் அறுவடையின் போது பொலிஸாரின் இடையூறு இருக்கமாட்டாது - கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
|
|
|


