நெல் அறுவடையின் போது பொலிஸாரின் இடையூறு இருக்கமாட்டாது – கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Friday, February 8th, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நெல் அறுவடைக்காகக் கொண்டு செல்லும் அறுவடை இயந்திரங்கள் மற்றும் அறுவடை செய்கின்ற நெல் என்பவற்றை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரங்கள் என்பவற்றை வீதியில் கொண்டு செல்வதற்கு பொலிஸார் இடையூறுகள் ஏற்படுத்த மாட்டார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு ஏ – 35 வீதியின் பரந்தன் சந்தி தொடக்கம் புளியம் பொக்கணை சந்திவரையான பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரங்களைக் கொண்டு செல்லும் போதும் அறுவடை செய்கின்ற நெல்லை வீடுகளுக்கு கொண்டுவருகின்றபோதும் வீதிப்போக்குவரத்துப் பொலிஸார் மறித்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி விவசாய மாவட்டமாக இருப்பதுடன் விவசாய அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த விடயத்தில் பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது என கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொலிஸார் இடையூறு ஏற்படுத்தும் முகமாக நடந்துகொண்டால் தமக்கு தெரியப்படுத்துமாறும் இனிவரும் காலங்களில் இடையூறுகள் ஏற்படாது என்றும் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நெல் அறுவடை இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் வீதிகளில் செல்ல வேண்டுமென்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts: