மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் எதிர்வரும் 29 முதல் மீள திறக்க அனுமதி!
Wednesday, March 24th, 2021
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண பாடசாலைகளின் 5, 11 மற்றும் 13 தரங்களின் கல்வி நடவடிக்கை கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.
எனினும், மேல் மாகாணத்தின் ஏனைய தரங்களை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம்திகதி ஆரம்பிப்பதென முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடப் புத்தங்கங்களை விரைவாக வழங்க நடவடிக்கை - கல்வி வெளியீட்டுத் திணைக்களம்!
வடக்கு உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் கால நிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
தாய்லாந்து செல்கிறார் முன்னாள் அரச தலைவர் கோட்டாபய . தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்து அரசாங்...
|
|
|


