மேலும் 1595 முகாமைத்துவ உதவியாளர்களை உள்வாங்க அமைச்சு அனுமதி!
Friday, November 18th, 2016
முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 1595 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கு நிதி அமைச்சு அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு 1595 பேரை சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் கூடுதலான புள்ளிகளை பெற்றவர்கள் இந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

Related posts:
சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மாற்றம்?
இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங...
ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் அக்கிராசன உரையில் ஜனாதி...
|
|
|


