மேலும் குறைவடைகிறது மரக்கறிகளின் விலைகள்!
Tuesday, February 12th, 2019
மரக்கறிகளின் விலைகள் மேலும் குறைவடைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக விக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பெரும்போகத்தின் மூலம் மரக்கறிகளின் விளைச்சல் அதிகளவில் பெறப்பட்டமை இதற்கான காரணம் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கோவா கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை 10 ரூபாவாகவும், பீட்ரூட் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை 12 ரூபாவாகவும் நிலவுகின்றன. அத்துடன் தக்காளி கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை 35 ரூபாவாகவும் நிலவுகிறது.
ஏனைய மரக்கறிகளின் மொத்த விலை 30 ரூபாவிற்கும் குறைவாகவே உள்ளதாக விவசாய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு!
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது - நீதி அமைச்...
ஐந்து மாதங்களில் 53 வீத நிலுவைத் பில்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...
|
|
|


