மூன்று மணி நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் – போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர்!
Thursday, February 13th, 2020
வாகன சாரதிக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தமது விண்ணப்பம், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
வேரஹரவுக்கு சென்று யாரும் தமது நேரங்களை வீணடிக்க கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள ஏற்கனவே இருந்த டோக்கன் முறை மாற்றப்பட்டு இணையத்தின் ஊடாக மருத்துவம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன் அனுமதி பெறப்படும் முறை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொதுப் போக்குவரத்து சேவைப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் – இ...
சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


