சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 1st, 2022

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் என அறியப்படும் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மியூறேட் ஒஃப் பொட்டாஸ் என்பது அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் உர வகையாகும்.

விவசாயிகள் நெற்செய்கைக்கான குடலைப்பருவ உரம் எனவும் அதனை பயன்படுத்தப்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டு சிறுபோகத்தில் 6 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் உரம் தேவையென கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சர்வதேச போட்டி விலைமுறி பொறிமுறையைப் பின்பற்றி குறித்த உரத்தை இறக்குமதி செய்வதற்கும், அரசாங்கத்தின் உரமானிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அதனை விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் விவசாய அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: