பொதுப் போக்குவரத்து சேவைப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

Thursday, May 16th, 2019

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் ரயில்வே திணைக்களத்துக்கு 16 மில்லியன் வருமானம் கிடைத்துவந்த நிலையில், தற்போதைய வருமானம் 8 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் இது 50 வீத வருமான வீழ்ச்சி எனவும், ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் வருமானத்தில் 25 முதல் 30 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சபையின் பொது முகாமையாளர் ரொஷான் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளின் நாளாந்த வருமானம் 75 முதல் 80 மில்லியனினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts:

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி - இராணுவ தளபதி ...
இலங்கை - நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு - இலங்கையின் பால், கைத்தொழில் மற்...
தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் - அரச அச்சக திணைக்களம் தெரிவி...

இராணுவ மயமாக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - கல்வி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 12 ஆம் நாடாள...
37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!