மூன்று மணித்தியாலங்களுக்குஒருவீதிவிபத்து – வீதிபாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தலைவர்!

Saturday, May 19th, 2018

இலங்கையில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு வீதிவிபத்து இடம்பெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது என வீதிபாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தலைவர் டாக்டர் கோதாகொட தெரிவித்துள்ளார்.

சம்பரகமுவ மாகாணசபை கட்டித் தொகுதியில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது டாக்டர் கோதாகொட குறிப்பிட்டார்.

அவர் அங்குமேலும் குறிப்பிடுகையில்  இலங்கையில் தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு தடைவ வீதிவிபத்துகாரணமாக ஒருவர் பலியாகின்றார். கடந்தவருடம் இரலங்கையில் ஏற்பட்ட வீதிவிபத்து காரணமாக 3100 பேர்பலியாகியதுடன் 4320 பேர் அங்கவீனமுற்றுள்ளனர். சாரதிகள்  அதிகவேகத்துடன் வாகனங்களை செலுத்துவது வீதி ஒழுங்குமுறைகளை மீறுவது போதைபொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்துதல் தொலைபேசி உரையாடலுடன் வாகனங்களை செலுத்துதல் வெற்றிலை உண்ணல் போன்றவற்றால் வீதிவிபத்தக்கள் அதிகமாக இடம் பெறுவதாககுறிப்பிட்டார்.

இவ்வாறான விபத்துக்களிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சப்ரகமுவமாகாணத்தில் வீதிபாதுகாப்புபிரிவு ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts: