மன்னிப்பு கோரினார் அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Wednesday, August 2nd, 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணைமுறி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மன்னிப்பு கோரியுள்ளார்.

முன்னராக இரண்டு தடவைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் சமூகமளித்திருக்கவில்லை. கடந்த 26 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம் அவர் முன்னிலையாகவில்லை.

பாதுகாப்பு சபையை கூட்டிய நிலையில் தமக்கு சில பணிகளை ஒப்படைந்திருந்ததால், அன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என அவர் சார்பான சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.பின்னரான தினங்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் பங்குகொண்டமை மற்றும் வெளிநாட்டு விஜயங்கள் மேற்கொண்டிருந்த நிலையில், அவரால் ஆணைக்குழுவில் ஆஜராக முடியவில்லை.

இந்நிலையில், இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய அவர் முற்பகல் 10.30 மணியளவில் சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, தன்னால் இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் ஆணைகுழுவில் ஆஜராக முடியாதமையிட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.அத்துடன், வரமுடியாமல் போனமைக்காக காரணத்தையும் கூறியுள்ளார்

Related posts: