முச்சக்கரவண்டிக்கு ஆசனப்பட்டி அறிமுகப்படுத்த நடவடிக்கை!
Sunday, April 17th, 2016
நாட்டிலுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு ஆசனப்பட்டிகளை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கரவண்டிகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் குறித்த யோசனை நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்களின் போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்வோர் தூக்கி எறியப்படுவதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, இதனை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பட்டியோ அல்லது பொருத்தமான பாதுகாப்பு முறையொன்றையோ செயற்பாட்டு ரீதியில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அறிக்கை தயாரித்து வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.ய
Related posts:
நேபாளம் - இலங்கை இடையே ஒப்பந்தம் !
வன்முறை கும்பலை சேர்ந்தவரை தப்ப விட்டனர் சுன்னாக பொலிஸார் - மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!
டெங்கு அபாயத்தில் பல மாவட்டங்கள் – கடும் எச்சரிக்கை விடுக்கிறது தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!
|
|
|


