எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படும் !

Thursday, January 28th, 2021

எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு நீடிக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

மழையுடனான காலநிலை காரணமாக, பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்பே இதற்கான காரணம் என அந்த மையத்தின் ஆய்வு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரஞ்சித் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு தற்போதைய நாட்களில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைில் யாழ் மாவட்டத்தின் பிரதான பொதுச் சந்தைகளிலும் மரக்கறிவகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சிறு வியாபாரிகளும் நுகர்வோரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக கத்தரிக்காய் 350 முதல் 400 ரூபாவரையிலும் பயற்றங்காய் 300 முதல் 350 ரூபா வரையிலும் விற்கப்படுவதுடன் ஏனைய கரட், பீற்றூட், கோவா,போஞ்சி உள்ளிட்ட மரக்கறிவகைகளும் ஏற்கனவெ இரந்த விலைகளிலும் பார்க்க 10  ரூபாமுதல் 150 ரூபாவர அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: