போதைப் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நால்வர் உயிரிழப்பு – தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் அதிர்ச்சி தகவல்!

Friday, December 25th, 2020

புகையிலை மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் நால்வர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் டாக்டர் சமதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர் –

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகையை புகையிலை மற்றும் மதுபான பாவனைக்கு செலவிடுகிறார்கள்.

இலங்கையில் தினமும் சுமார் 60 பேர் புகைபிடிப்பதால் இறக்கின்றனர், சுமார் 50 பேர் மதுபானம் காரணமாக இறக்கின்றனர், இந்த இரண்டு காரணங்களால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 பேர் இறக்கின்றனர்.

சிகரெட் மற்றும் மதுபானம் மீது அரசாங்கம் வரி விதித்து வருமானத்தை பெற்றாலும், போதைப்பொருள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வரி வருவாயை விட மூன்று மடங்கு அதிகமாக செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: