முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது!

Wednesday, March 31st, 2021

வெளிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேநபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் தனியார் வங்கிக் கணக்கொன்றுக்கு, வெளிநாட்டிலிருந்து ஒருகோடியே 34 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தொகையொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, முறையற்ற விதத்தில் இலங்கைக்கு பணம் அனுப்புகின்றமை குறித்து, பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம்முதல் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 14 கோடி ரூபாய் பணம், இவ்வாறு முறையற்ற விதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில், ஏற்கனவே சுமார் 30 சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நபர்களே, இவ்வாறான நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவருகின்றதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பீடத்தக்கது.

00

Related posts: