இழப்பீடு வழங்க கேம்பிரிட்ஜ் அனலிடிகா மறுப்பு!

Sunday, May 27th, 2018

பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கசிய விட்ட பிரச்னையில் பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பேஸ்புக் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இப்பிரச்னை குறித்து விளக்கமளிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டது.

இதையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் பிரஸ்ஸெல்சில் ஆஜராகி விளக்கமளித்தார். எம்.பி.,க்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எழுத்துமூலமாக பதில்களை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் அவரது பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று எம்.பி.,க்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.இதற்கு பேஸ்புக் அளித்துள்ள பதில்: பயனாளிகளின் வங்கி கணக்கு விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை. எனவே யாருக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய தேவை இல்லை, என்று பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.

Related posts: