சிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்களை தடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் – நாட்டு மக்களிடம் பிரதமர் வலியுறுத்து!

Saturday, June 12th, 2021

குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கு கடந்த காலத்தை அர்ப்பணித்த தாங்கள், இன்றும் அதற்காக கடுமையாக உழைத்து வருவதாக உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இன்று உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளாகும். குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்க – இப்போதே செயற்படுங்கள்’ என்பது இந்த ஆண்டுக்கான உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளுக்கான தொனிப்பொருளா அமைந்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலகளாவிய நிலைத்தன்மையை இலக்காக கொண்டு 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிக்கும் இலக்கை கொண்ட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஆபத்தான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

தற்போதைய தலைமுறையை மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று தாங்கள் சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அதனால் சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் தாம் தயவுடன் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: