தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு – சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வ அறிவுப்பு!

Sunday, January 7th, 2024


…….
தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.health.gov.lk/) வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையதளத்தைப் பார்த்து, நேர்காணலின் திகதி, இடம் மற்றும் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்துள்ளது.

2019/2020 க.பொ.த உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களில் சித்தியடைந்த 4000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இம்மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி 18ஆம் திகதி வரை மாணவர் தாதியர் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான முதற்கட்ட தகுதித் தேர்வு நேர்காணல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

000

Related posts:

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக...
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், 52 வீத கட்டில்கள் கொவிட் த...
வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள்...

நிரந்தர குடிநீர் வசதியினை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை நல்லூர் கிராம மக்கள்...
கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு - ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும்...
கிளிநொச்சியில் 97.2 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது - மாவட்ட அரச அதிபர்!