போதைப்பொருள் கடத்தல்: 19 குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி?

Thursday, July 12th, 2018

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஹெக்ரோயன் உள்ளிட்ட உயிர்கொல்லி போதைப் பொருள்களை கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு மேல் நீதிமன்றால் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படுகின்றது.

எனினும் அந்தத் தண்டனையை தீர்ப்பு ஜனாதிபதியால் நிறைவேற்றுப்படுவதில்லை. நாடாளுமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை மாகாண மேல் நீதிமன்றங்களால் விதிக்கப்படும் தூக்குத் தண்டனைகள் ஜனாதிபதியால் நிறைவேற்றப்படுவதில்லை.

மாறாகத் தூக்குத் தண்டனைக் காலம் சுமார் 15 ஆண்டுகளில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகின்றது. இந்த நிலையில் போதைப் பொருள்கள் குற்றத்துக்கு விதிக்கப்படும் தூக்குத் தண்டனை குற்றத் தீர்ப்பை நிறைவேற்றுவது என அமைச்சரவை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாகத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதில் மாகாண மேல் நீதி மன்றங்களால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 19 குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அவர்களின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பின்னர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் கட்டளையை ஜனாதிபதி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: