மூக ஒற்றுமையின்மையே கலாசார சீரழிவுகளுக்கு காரணமாகின்றது – யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்!

Sunday, May 15th, 2016

சமு­தா­யத்தில் மற்றும் குடும்­பங்­க­ளுக்குள் ஒற்­று­மை­யின்­மை­யாலே கலா­சார சீர­ழி­வுகள் இடம்பெறு­கின்­றன. இவற்றைத் தடுப்­ப­தற்கு குடும்ப ஒற்­று­மை­யான கலந்­து­ரை­யாடல் இடம்பெறவேண்டும் என யாழ்.மறை மாவட்ட ஆயர் ­க­லா­நிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்­டகை தெரி­வித்தார்

பண்­டத்­த­ரிப்பு பற்­றிமா அன்னை யாத்­திரை தல திரு­வி­ழாவில் நேற்று கலந்து கொண்­ட­போதே இதனைத் தெரி­வித்தார்

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்

குடும்ப வாழ்க்­கையை எடுத்துக் கொண்டால் கணவன் மனை­விக்கு பிர­மா­ணிக்­க­மா­கவும் மனைவி கண­வ­னுக்குப் பிர­மா­ணிக்­க­மா­கவும் பெற்றோர் பிள்­ளை­க­ளுக்கு பிள்­ளைகள் பெற்றோருக்கு பிர­மா­ணிக்­க­மா­கவும் இருக்­க­வேண்டும். இன்று இவை கேள்விக்குள்ளாகியுள்ளன. காரணம் சுய­நலம்

திரு­ம­ணங்கள் இன்று விவா­க­ரத்து ஆகும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. கணவன் மனைவி பிள்ளைகள், பேரன் பேத்­தி­யான நிலை மாறி தனி­யான வாழ்க்கை வாழ்­கி­றார்கள். இது எங்கள் எல்­லோ­ரு­டைய தவ­றாகும். கூட்­டுக்­கு­டும்­ப­மாக இல்­லாது தனி­யாகச் சென்று ஒரு குடும்பத்தில் பிரச்­சினை ஒன்று உரு­வா­கும்­போது அவர்­களை ஒன்­றி­ணைக்­காது அவர்­களைப் பற்றி இன்னும் இல்­லா­த­தையும் பொல்லாததையும் சொல்லி அவர்­களைப் பிரிக்கும் செயல் அதி­க­ரிக்­கி­றது

திரு­ம­ணத்­திலும் பிர­மா­ணிக்கம் தவறி வரு­கி­றது. இதற்குக் காரணம் சுய­நலம். திரு­மண பந்தத்தின்­போது இன்­பத்­திலும் துன்­பத்­திலும் உடல் நலத்­திலும் நோயிலும் நான் பிரமாணிக்கமாக இருப்பேன். காலம் செல்ல இதெல்லாம் மறைந்து விடு­கின்­றது

ஆசி­ரியன் தனது தொழிலில் பிர­மா­ணிக்­க­மாக இருக்­கின்­றானா? பாட­சா­லைக்குச் சென்றால் எப்­போது ரியூ­ச­னுக்குச் சென்று உழைக்­கலாம் என்று எண்ணிப் பாட­சாலையில் படிப்­பித்தல் இல்லை

இதேபோல் அர்ப்­பண வாழ்­விலும் பிர­மா­ணிக்கம் இருக்­கி­றது. பிறர் தேவை அறிந்து ஏனையவருக்கு உதவி செய்யும் மனம் வேண்டும். இன்­றைய வருடம் இரக்­கத்தின் ஆண்­டாக உள்­ளது. பிச்சை வழங்­கு­வதோ காசு கொடுப்­பதோ இரக்­க­மல்ல. மற்­ற­வர்­களின் தேவை உணர்ந்து செய்­வதே இன்­றைய தேவை

இன்­றைய சமு­தாய சூழலில் கலா­சார சீர­ழி­வுகள் நடை­பெ­று­கின்­றன. வன்புணர்வு, கொள்ளைகளால் நிறைந்து சிக்­க­லான வாழ்க்­கை­யாக உள்­ளது. இதற்­குக்­கா­ரணம் குடும்பங்களுக்குள் ஒற்­றுமை இல்லை. குடும்­ப­மாக இருந்து கதைப்­ப­தில்லை. கலந்துரையாடுவ­தில்லை. ஒரு­வ­ருக்கு விட்டுக் கொடுப்­புக்கள் இல்லை. ஒன்­றாக இருந்து செபிப்­ப­தில்லை. அதி­காலை 4,5 மணிக்கு புலமைப் பரிசில் பரீட்­சைக்­காக ரியூ­ச­னுக்கு தாயார் தனது பிள்­ளையைக் கொண்டு செல்­கிறார். ஏன் சிறு­வர்­களை இத்­த­கைய கொடு­மை­களைச் செய்­கி­றீர்கள். புலமைப் பரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்கள் எத்­த­னையோ பேர் வைத்­தி­ய­ராகி தொழில்நுட்பவியலாளராகி பொறியியலாளராகி முன்னேறியுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் தப்பான அபிப்பிராயம் இருக்கிறது. சமயங்கள் தமது மதபோதனையில் விசுவாசமாக செயற்பட வேண்டும். இது இல்லை என்றால் சமாதானம் நாட்டுக்கும் கிடைக்காது; எமக்கும் கிடைக்காது என்றா

Related posts: