தீர்வுகள் கிடைப்பது சாத்தியப்படுமா என்பதை விட அதனை சாத்தியப்படுத்த வேண்டியவர்களாக இருப்பதே முக்கியமானது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 26th, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதனூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட தீர்வுகள் கிடைப்பது சாத்தியப்படுமா என்பதை விட அதனை சாத்தியப்படுத்த வேண்டியவர்களாக இருப்பதே முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் அதை சாத்தியப்படுத்துபவராக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இருப்பார் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (28.04.2024) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சிறீரங்கேஸ்வரனிடம்  ஈ.பி.டி.பியின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாடு ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதனூடாக சாத்தியமாகுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டை வழிநடத்தக்கூடிய சிறந்த தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.

இதேவேளை சஜித் பிரேமதாச வடக்க கிழக்கில் 1000 விகாரைகளை கொண்டுவருவென் என பகிரங்கமாக கரத்தக் கூறியிருந்தவர்

அதேபோன்று குறைந்த பட்சம் வடகிழக்கு இணைந்த ஒரு அலகாக இருப்பதை கூட விரும்பாத அல்லது  இருக்கக் கூடாது என நீதிமன்று சென்று வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர்கள் ஜேவிப்பியினர்.

இந்நிலையில் அதற்கு வேறுபட்ட அரசியல் நகர்வை கொண்ட தலைவராக ரணில் விக்கரமசிங்க இருக்கின்றார். இது அனைத்து கட்சியினருக்கும் நன்கு தெரிந்த விடயம்.

அதேநேரம் குறித்த தேர்தாலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் வேட்பாளர்களுக்குள் ரணிலே சிறந்த தெரிவாகவும் உள்ளார்.

இதேநேரம் எமது கட்சி மக்கள் நலன்கள் எதிர்காலம் மற்றும் நாட்டின் நலன்களிலிருந்து சிந்தித்தே தீர்மானங்களை எடுத்துவருகின்றது. அந்தவகையில் தற்போதுள்ள அரசியல் சூழலில் நணிலின் தெரிவே சாத்தியமானதென்று நாம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்து வருகின்றோம் என்றும் அவர்’ சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 916 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இன்று ஆதரவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்...
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கு சீனா உதவியது - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவிப்பு!