கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது – இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந்தம் பாக்சி மீண்டும் வலியுறுத்து!

Saturday, July 16th, 2022

கோட்டாபய ராஜபக்சவின் தலைமைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்த பின்னர் நாட்டிலிருந்து அவர் வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கை மக்கள், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு மூலம் முன்னேற்றத்திற்கான அபிலாஷைகளை நனவாக்க முற்படும்போது இந்தியா அவர்களுடன் தொடர்ந்திருக்கும் என்றும் இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் 3.8 பில்லியன் டொலர் உதவியை, இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு முக்கியமான அண்டை நாடு என்றும், அங்கு உருவாகி வரும் சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்த அவர், இலங்கையில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் புதுடெல்லி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: