அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, August 3rd, 2019


நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே ஆங்கில ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மஹரகம அபேக்ஸா வைத்தியசாலையில் முக்கியமான புற்று நோய் மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு துரதிஸ்டவசமானது எனவும், சில மருந்து வகைகள் உயிர்காப்பு மருந்து வகைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் அரசாங்க மருத்துவ மனைகளில் வழங்கப்படும் மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் கேள்வி எழுவதாகத் தெரிவித்துள்ளார். மருந்துப் பொருள் தட்டுப்பாடு நிலவும் மருத்துவமனைகளுக்கு சென்று மக்களுக்கு அது குறித்து அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts: