முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது இலங்கை !
Sunday, March 3rd, 2019
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு உறுப்புரிமையை மீண்டும் இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.
டுபாயில் தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் அறிக்கையிடப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , கடந்த 09 மாதங்களுக்கு பின்னரே இலங்கைக்கு முழு உறுப்புரிமை கிடைத்துள்ளது.
உரிய காலத்தில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் இடம்பெறாமை காரணமாக இலங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்காணிப்பு மட்டத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹேரத் தரவரிசையில் முன்னேற்றம்!
87 ஓட்டங்களினால் இலங்கை அணி தோல்வி!
எரிபொருள் நெருக்கடி யை சமாளிக்க சில வாகனங்களின் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!
|
|
|


