ஹேரத் தரவரிசையில் முன்னேற்றம்!

Thursday, August 18th, 2016

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெற் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை ஐ.சி.சி இன்று (18) வெளியிட்டுள்ளது.

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர்களிகளின் பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸி அணியுடனான முதலவாது டெஸ்ட் போட்டி முடிவின்போது  9 ஆவது இடத்திலிருந்த ஹேரத் தற்போது 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் ஜேம்ஸ் என்டர்ஸன்  முதலாவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 அவது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை டேல் ஷ்டெய்ன் 3 அவது இடத்தை பிடித்துள்ளார்.

Related posts: