முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் உத்தரவு விடுத்துள்ளார்.
தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் : ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்...
உளநலம் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் கொடுங்கள் - காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக...
|
|