பாடசாலை நடவடிக்கைகளை ஆராய்வதற்காக விசேட விசாரணைப் பிரிவு!

Monday, November 28th, 2016

2020ம் ஆண்டளவில் கல்வித்துறையில் நவின மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று  கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

காலி சவுத்லான்ட் பெண்கள் கல்லூரியின் 130வது பரிசளிப்பு விழாவில் கலந்து செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி உரையாற்றினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

கல்வித்துறையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பாடசாலை நடவடிக்கைகளை ஆராயும் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளத் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்காக விசேட விசாரணைப் பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது. இந்தப் பிரிவின் நடவடிக்கைகள் அடுத்த வருடம் மே மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.சர்வதேச மட்டத்திலான தொழில் வாய்ப்புக்களுக்கு பொருத்தமான பணியாளர்களை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டமும் இதில் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

a5bfab8809e31e5a346f2684f94346d3_XL

Related posts: