முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு!
Monday, July 29th, 2024
முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் மூலம் குறித்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வறுமையான மாவட்டங்கள் வடக்கிலேயே அதிகம் அதைப் போக்க ஒன்றிணையுமாறு மாவட்டச் செயலாளர் வேண்டுகோள்!
எதிர்கால சந்ததியின் நன்மை கருதி எடுத்த தீர்மானத்தை ஒருபோதும் மாற்றமாட்டேன் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் - தனியார் வைத்த...
|
|
|


