வறுமையான மாவட்டங்கள் வடக்கிலேயே அதிகம் அதைப் போக்க ஒன்றிணையுமாறு மாவட்டச் செயலாளர் வேண்டுகோள்!

Thursday, January 12th, 2017

நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டங்கள் என இனங்காணப்பட்ட 5 மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் வடக்கு மாகாணத்திற்குரியவை என வடமாகாண முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தனிக்குடும்ப தன்னிறைவே கிராமங்களின் தன்னிறைவாகவும், கிராமங்களின் தன்னிறைவே  மாவட்டத்தின் ஊடான நாட்டின் தன்னிறைவாகவும் விளங்கும். 2015ஆம் ஆண்டு செம்ரேம்பர் மாதம் ஜக்கிய நாடுகள் சபையில் நிலையான அபிவிருத்தி குறிகாட்டிகளாக 17 விடயங்கள் இனங்காணப்பட்டன. அவற்றை ஜ.நாவில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் ஒரு மனதாக அங்கீகரித்தன.

17 விடயங்களிலும் குறிப்பிட்டளவு வீதத்தை 2030ஆம் ஆண்டுக்குள் எட்ட முடியாது விட்டால் உலகம் அழிவை சந்திக்கும். உலகில்  எல்லா விதமான வறுமைகளையும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒழித்தல், விவசாயத்தை ஊக்குவித்து மந்த போசனத்தை நீக்கி, ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப ஊக்குவித்தல் என்பனவை அதில் மிக முக்கிய இருவிடயங்கள், சுகாதாரம், நீர் ஏனைய விடயங்கள் அடுத்த கட்டமாகவும் இனங்காணப்பட்டன.

இலங்கையும் அவற்றை ஏற்றுள்ளது. 2017ஆம் ஆண்டை வறுமையில் இருந்து விடுபடும் ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது. அதற்காக சரத் அமுனுகம தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இலங்கை மக்களை எவ்வாறு வறுமையில் இருந்து விடுவிக்க முடியும் என ஆராய்கின்றது. இலங்கையின் 25 மாவட்டங்களில் 5 மாவட்டங்கள் வறுமையான மாவட்டங்களான இனங்காணப்பட்டுள்ளன.

அவற்றில் வடக்கு மாகாணத்தைந் சேர்ந்த மாவட்டங்கள் உள்ளன. இலங்கையின் வறுமை வீதமானது தேசிய ரீதியில் 6 வீதமாக உள்ள போதிலும் அது வடக்கு, கிழக்கில் மிக அதிகரித்த வீதத்தில் உள்ளது. வறுமை ஒழிப்பை மேற்கொள்ள மக்களால் தேர்வானவர்களும் மக்களுக்காக பணியாற்றுபவர்களும் இணைந்து ஏதோ ஒரு வகையில் சேவையாற்ற வேண்டும் என்றார்.

IMG_0552-1024x576

Related posts: