முன் அறிவித்தலின்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த நேரிடும் – அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரு வார காலத்திற்குள் நேரத்தை ஒதுக்கித்தர தவறும் பட்சத்தில் முன் அறிவிப்பின்றி தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்த நேரிடும் என தபால் தொழிற்சங்கங்கள் ஒன்றிய கூட்டமைப்பின் அழைப்பாளர் சிந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்கித் தருமாறு கோரி எழுத்த மூல கோரிக்கைகள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும். தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் வேலைநிறுத்தம் வரையிலான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் சிந்தன பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டிக்கு ஆசனப்பட்டி அறிமுகப்படுத்த நடவடிக்கை!
இ.போ.ச வின் போராட்டம்: போக்குவரத்தை திறம்படக் கையாண்ட தனியார்!
அவசரகாலச்சட்டம் நீக்கம் - அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
|
|