முன்மொழியப்பட்ட நிவாரணத்தை ஒப்புதல் அளிக்கப்பட்ட திகதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுங்கள் – பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, May 7th, 2021

பயங்கரவாதத்தின் காரணமாக  இறந்த, அங்கவீனமுற்ற  படை வீரர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் உரித்தான நிவாரணங்களை 2021 ஏப்ரல்  மாதம்முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களுக்கும் சுதந்திரமானதொரு தேசத்தை பெற்றுக்கொடுப்பதற்காக படைவீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து ஊனமுற்றனர். எனவே, அவர்களுக்கு வழங்க முடியுமான அனைத்து வசதிகளையும் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்று “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் படை வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏழு திட்டங்களுடன் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்கு ஏப்ரல் 27 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்மொழியப்பட்ட நிவாரணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட திகதியிலிருந்து அதனை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: