யாழ்ப்பாணம் குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை அமோகம்!
Wednesday, January 4th, 2017
யாழ்.குடாநாட்டில் இம்முறை போகத்தின் போது பல ஹெக்ரேயர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண விவசாயத்திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பரவலாக இந்த உருளைக்கிழங்கு செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டனர். என்றாலும் கூடுதலாக வலி.கிழக்கு பிரதெசத்தில் அதிகளவிலான விவசாயிகள் இச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பான கோப்பாய், நீர்வேலி, சிறுபிட்டி, புத்தூர், உரும்பிராய், ஊரெழு, புன்னாலைக்கட்டுவான், நவக்கிரி, ஈவினை, மாசுவன் போன்ற பகுதிகளில் கூடுதலான விவசாயிகள் இச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கான விதை உருளைக்கிழங்குகள் யாவும் 50 வீத மானிய விலையில் விநியோகிக்கப்பட்டன. செய்கை ஆரம்பிக்கப்ப்டு பயிர்கள் தற்போது நல்ல நிலையிலும் காணப்படுகின்றன என்று செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
விரைவில் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மீளாய்வு!
பெண்களுக்கான அழைப்பு - பரந்தன் இந்துமகா வித்தியாலயத்திற்கு வாருங்கள்!
கியூ.ஆர். குறியீடு - இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு!
|
|
|
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் குழு அறிக்கை ஒக்டோபரில் சமர்ப்பிக்கப்படும்- சுனில் ...
இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - ஜனாதிபதியை மேற்கு வங்...
இஸ்ரேல் – இலங்கை இடையில் நேரடி விமான சேவை – பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு மற்றுமொரு தின...


