முன்னாள் பிரதி அமைச்சர் கருணா கைது!
Tuesday, November 29th, 2016
முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக கருணா இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்களில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பாய்வுகளை மேற்கொண்ட பின்னரே தீர்மா...
யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போத...
இலங்கைக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!
|
|
|


