முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தின வைபவம்!
Monday, May 1st, 2017
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள உருவச்சிலைக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டார்கள். இன்று காலை கொழும்பு ஹூணுப்பிட்டிய காங்காராம விஹாரையில் மஹாசங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் 250 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உறுதிகள் மற்றும் கடன் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் ஏற்பட்ட அமரர் பிரேமதா மகத்தான பணிகளை நிறைவேற்றினார் என்று குறிப்பிட்டார்.
Related posts:
க.பொ.த பரீட்சை மோசடி - மூவர் கைது!
நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா...
பாடசாலை மாணவர்கள் 18 இலட்சம் பேருக்கு போஷாக்கான பகல் உணவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - விவசாய அமைச்...
|
|
|


