முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
Friday, October 14th, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படது.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிற்பக் கலாநிதி சிவப்பிரகாசம் காலமானார்!
ஊர்காவற்றுறையில் விசமிகளால் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஈழமக்கள் ...
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
|
|
|


