இலங்கைக்கு அமெரிக்க நிறுவனம் உதவி!

Wednesday, September 21st, 2016

அமெரிக்காவின் மில்லேனியம் சலேன்ஜ் கோப்ரேசன் (Millennium Challenge Corporation) நிறுவனம் தன்து ஆரம்ப நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையினை தெரிவுசெய்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தனா ஜே ஹைடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (20) நியூயோர்க்கில் வைத்து சந்தித்தார்.

2016 டிசம்பரில் இடம்பெறவுள்ள மில்லேனியம் சலேன்ஜ் கோப்ரேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ள செயலாக்க அறிக்கையினை தயாரிப்பதற்காக தம்முடைய குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்திட்டங்கள் எவை என்பது தொடர்பில் பணிப்பாளர் சபை அறிக்கை சமர்ப்பிர்க்கப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்ட ஹைடி, புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக முன்னெடுக்கும் பல செயற்திட்டங்களுக்கு தமது நிறுவனம் உதவியளிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

724809350Untitled-1

Related posts:

நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திலீபன் அவர்களின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக...
48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
புத்தர் சிலை சேதப்படுத்திய விசாரணையை முறையாக மேற்கொண்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவை தட...