முச்சக்கர வண்டி தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் முச்சக்கரவண்டிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க கூடிய வகையில் மட்டுப்படுத்துமாறு இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உரிய அவதானத்தை செலுத்தவில்லை என இந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பொலிஸாருக்கு ஊக்குவிப்பு பரிசு வழங்கி இலஞ்சத்தை கட்டுப்படுத்த புதிய முயற்சி!
விவசாயிகளின் நலன் கருதி உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!
நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!
|
|