விவசாயிகளின் நலன் கருதி உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Saturday, February 24th, 2018

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ  உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி  வரி 1 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்படும் உள்ளூர் விவசாயிகளின் உருளைக்கிழங்கிற்கு அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு  சிறந்த விலை கிடைப்பதற்கு வசதியாகவே இந்த  வரிஅதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி  வரை இந்த வரி அதிகரிப்பு நடைமுறையிலிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: