முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு கடன் திட்டம்!

Monday, January 28th, 2019

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு 10 மில்லியன் ரூபா வீடமைப்பு கடன் வழங்கப்படவுள்ளதுடன், இரண்டு வருடங்கள் நிவாரண காலத்துக்கு உட்பட்ட வகையிலும் 15 வருடங்களில் மீளச் செலுத்தும் வகையிலும் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிநி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்காக மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி வாடகை மோட்டார் வாகன சேவைகளை ஆரம்பிக்க 20 லட்சம் ரூபா நிவாரண கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

35 வயதை தாண்டிய, முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: