முகமாலையில் வெடிபொருள் அகற்றும் பணி தாமதம் : 257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத அவல நிலை!

Wednesday, June 29th, 2016

கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலைகாணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் இவர்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகினறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெடிபொருள் ஆபத்தான பகுதியாக காணப்படும் குறித்த பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு அதிகமாக வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வெடிபொருள் அகற்றும் பணிகள் நிறைவு பெறாமையினாலும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினாலும், இத்தாவில், முகமாலை, வடக்கு மற்றும் மேற்கு,  வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்துள்ள 257 குடும்பங்கள் வெளிமாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: